மன்முனையில் 34.7கிலோ கஞ்சா வீடொன்றில் இருந்து பொலிசார் கைப்பற்றினர்.

சப்னி அஹமட்
ட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்தில் நேற்று (25.4.2013) வியாழக்கிழமை 34 கிலோ 700 கிராம் கஞ்சா கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.

 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று இந்த கஞ்சாவை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் பயனாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜயவர்த்தன, மற்றும் எஸ்.ஐ.உபாலி, ஸார்ஜன் ஜெயசுந்தர, ஸார்ஜன் பத்மசேன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான விதானகே, மற்றும் ஜயரத்ண ஆகியோர் இந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ 700கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இன்று (26) வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :