மக்களின் நலனை கருத்தில் கொண்டே எனது சகல செயற்பாடுகளும் உள்ளன -Dr.சிராஸ்

(அகமட் எஸ். முகைடீன்)
ள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமானப் பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நான் இம்மாநகர சபையினை பொறுப்பேற்றது முதல் நிர்வாகத்தினை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து மக்கள் பணியினை சிறப்பாக முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதன் பலனாய் மாநகர சபை மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. சென்ற காலங்களில் வியாபார அனுமதிப்பத்திரம் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டது. 

அதனை தற்போது ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் சீர் செய்துள்ளேன். இதனால் வியாபார அனுமதிப்பத்திரம் பெறுமானம் மிக்கதாக மாற்றமடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் தற்போது அக்கறை செலுத்துகின்றனர். அதன் மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. இச்செயற்பாடுகளில் ஆசிய மன்றத்தின் உதவியினை நான் நாடியபோதெல்லாம் உதவிய ஆசிய மன்றத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்தார்.


கடந்த காலங்களை விட தற்போதைய முதல்வரின் காலப்பகுதியில் மாநகர சபையின் வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக இதன்போது கருத்துரைத்த ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஐ.எம். வலீத் தெரிவித்தார். 

கடந்த 2008, 2009, 2010 ஆண்டிற்கான முத்திரை வரி வருமானம் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் முயற்சியினால் 2011, 2012 காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்தோடு மக்கள் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய சோலை வரியினை செலுத்துவதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் 03 மில்லியனாக இருந்த மாநகர சபையின் நிலையான வைப்பு தற்போதைய முதல்வரின் முயற்சியால் 20 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இக்கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த ஐக்கிய இராட்சிய (UK) சசக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மைக்கல் மோர், வில்சன் பிறிச்சட் ஆகியோர் முதல்வரின் செயற்திறனை வெகுவாக பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம். வலீத், றிசாட் சரீப், சி. சசிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :