றிசானா நபீக்கின் மரணம் மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாகட்டும்?- சிறப்புப்பார்வை.


எஸ்.எல். மன்சூர்

இந்த றிசானா நபீக்கைப்போல எத்தனையோ ஏழைக்குமாரிகள் சீதனம் வரதட்சனைக் கொடுமை போன்ற நிலைமைகளால்தான் வெளிநாடுபோகத் துணிந்திருக்கின்றார்கள். உண்மையில் ஏழைகள் என்ற காரணத்தினால், பெண்ணாகப் பிறந்துவிட்டால் தனது வாழ்வை சீராக்கிக் கொள்ள எத்தனையோ ஏழைகளுக்கு ஒரு வாழிடமாகப் போய்விட்ட மத்தியகிழக்கு வெளிநாட்டுப் பயணத்தினால் பயனடைந்தோர் இந்த றிசானைவைப் போன்றவர்கள் அல்ல. அவர்களை ஆசையூட்டி பெய்யான வார்த்தைகளைக்கூறி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கின்ற முகவர்களும், அவர்களது அடியாட்களும்தான் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். கடந்த பல வருடங்களாக எமது நாட்டின் சந்து பொந்துகள் எல்லாம் இவ்வாறான ஏழைப் பெண்கள் பலர் வெளிநாட்டு மோகத்தினால் குறைந்த வயதை கூடிய வயதாகக் காட்டி பொய்யான பாஸ்போட்டுக்கள் ஊடாக சில ஏஜென்சிகளும், அவர்களது அடியாட்களும் செய்கின்ற கைங்கரியம் இந்த றிசானா நபீக்கைப் போன்ற எத்தனையோ பேர்கள் இன்று அநியாயமாக தங்களது மானத்தையும் இழந்து வாழ்வையும் சீரழித்து இறுதியில் உயிரையும் இழந்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டுகொண்டுள்ளோம
றிசானாவின் தூக்குத் தண்டணைக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகளின் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் தற்போது நிலைமை முற்றுப் பெற்றுவிட்டது. கடந்த ஏழு வருடங்களாக இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தும் விடுதலைக்காக செய்த எத்தனங்கள் அத்தனையும் தவிடுபொடியாகிவிட்டது. இந்த அனைத்துள்ளங்களும் ஒன்று சேர்ந்து இந்த றிசானாவை வெளிநாட்டுக்கு அனுப்பக் காரணமாக இருந்த நிலைமைகளை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அந்த பெண்மணி வாழ்ந்த வீட்டு நிலமைகளைப் பார்க்கும்போது கல்நெஞ்ஞம் படைத்தவர்களது மனமும் உருகும். இந்த வீட்டினைக் ஓரளவுக்கு கட்டிக் கொள்ளவும், தன்னுடைய  வாழ்வை சீர்படுத்தவும் சென்ற இந்த நபிசாவின் வாழ்வைப்போல நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் பல ஏழைப்பெண்கள் கண்ணீர்வடிக்கின்றனர். இவர்களுக்கு இந்த சமூகத்தில் உள்ள எத்தனையோ வாழிபர்களும், எத்தனையோ வசதி படைத்தவர்களும் இருந்து வாழ்வுகொடுக்கவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை.
எனவேதான் நமது கிராமங்களிலுள்ள ஏழைகள் பலர் இவ்வாறான நிலைமைகளுக்கு ஆட்பட்டுள்ளார்கள் என்பதை நாம் கண்டுகொண்டாலும் யாருமே இஸ்;லாமிய வாழ்வாதார முறைமைகளுக்குள் இன்னும் உள்வாங்கப்படாது இருப்பதனால்தான் இவ்வாறான சம்பங்கள் நாட்டில் மேடையேறுகின்றன என்பதையும் நாம் ஒவ்வொருவரும் நெஞ்சி;ல் கைவைத்து உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த நபீசாவின் முடிவுகளிலிருந்து ஈமானுடைய ஒவ்வொரு முஸ்லீமும் உணர்ந்து கொள்வதற்கு அல்லாஹ் படிப்பினையாக நபீசாவை முன்னுதாரணமாகக் காட்டியுள்ளான். ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள இளைஞர்கள் தங்களது வாழ்வை இவ்வாறான ஏழைகளின் பக்கமும் பார்வையைச் செலுத்துகின்றபோது ஹறாமான முறையிலமைந்த வாழ்வுக்கு முடிவுகட்டுவதற்கும் உதவியாக அமையும்.
நமது பள்ளிகள், ஊர் ஜமாஅத்தார்கள், நலன்விரும்பிகள், மார்க்க அறிஞர்கள், இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வாழும் அத்தனை உள்ளங்களும் நமது இறைவன், நமது நபி கூறியதன் பிரகாரம் நடப்பதற்கு நபீசா ஓர் உதாரணமாக அமைந்துள்ளார். இனிமேலாவது இவ்வாறான சம்பங்களோ, வெளிநாடு போகின்ற பெண்களோ இல்லாத ஒரு சமுகப்பற்றாளர்களாக நாம் அனைவரும் வாழ்வதற்கு இறைவன் துணைபுரிய வேண்டுவதுடன், இச்சந்தர்ப்பத்தில் கடந்;த ஏழுவருடங்களாக துன்பத்தில் ஆழ்ந்துள்ள றிசானாவுக்காகவும், அவரது குடும்பத்தின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்வதுடன், நமது பார்வைகள் அனைத்தும் இக்கட்டில் சிக்கித்தவிக்கும் றிசானாவின் குடும்பத்துக்கு உதவுகின்ற ஒருபக்குவத்தையும் தந்துதவ வேண்டும். எனவே, இஸ்லாமிய சகோதரர்களே! இன்னும் ஏன் தாமதம். இந்த றிசானா எதனைத் தேடிப்போனாரோ அதனை கொடுக்கின்ற ஒரு பண்புமிக்க சகோதரான இருந்து அவரது குடும்பத்துக்கு உதவுகின்ற ஒரு பணியை செய்வதற்குத் தயாராகுவோமாக!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :