லண்டனில் வாக்ஸ்ஹால் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள ஒரு கிரேன் மீது இன்று தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மோதி வெடித்தது.
அதில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால், மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. கிரேன் அருகில் நின்றிருந்த இரண்டு கார்களும் பற்றி எரிந்தன.
பொலிசார் மற்றும் 22 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து நடந்த இடத்தின் மிக அருகில்தான் இங்கிலாந்து இரகசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. புதிய அமெரிக்க தூதரகத்தின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையமும் அருகில் உள்ளது.
விபத்து நடந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
வாக்ஸ்ஹால் மற்றும் வாட்டர்லூ ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

0 comments :
Post a Comment