தேசிய மீழாத் விழா இம்முறை திருகோணமலையில்

2013ம் ஆண்டுக்கான தேசிய மீழாத் விழாவை இம்முறை திருகோணமலையில் கொண்டாடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்விழா எதிர்வரும் 25ம், 26ம், 27ம் திகதிகளில் கிண்ணியாவில் நடாத்தப்படவுள்ளது.

இவ்விடயம் சம்மந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (16) புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 8 பிராந்திய உலமாசபையின் தலைவர், செயலாளர் உட்பட நகர சபை பிரதேச சபை தலைவரகள் பாடசாலை அதிபர்கள் திணைக்களச் செயலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு தேசிய மீழாத் விழாவைச் சிறப்பாக கொண்டாடுவது சம்மந்தமாக தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :