அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது வெளிவாரி மதிப்பீடு ஆரம்பம்


(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் வருடந்தோறும் நடைபெற்று வருகின்ற பாடசாலைகளை மதிப்பீடும் வெளிவாரி மதிப்பீட்டுச் செயற்றிட்டம் இவ்வாண்டும் உரியமுறையில் மிகப்பயனுள்ள வித்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வலய மட்டத்திலான வெளிவாரி மதிப்பீட்டுப் பணி அண்மையில் (2013.01.16)ஆரம்பமானது. அக்கரைப்பற்று கேட்டத்திலுள்ள ஆண்கள் வித்தியாலத்தில் இப்பணி முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியின்போது அப்பாடசாலையிலுள்ள சகல வகுப்பறைகளும், கற்பிக்கின்ற சகல ஆசிரியர்களினதும் பணிகள் பற்றியும், வெளிவாரி மதிப்பீட்டுக்குரிய எட்டுவகை பணிகளின் செயற்பாடுகள் பற்றியும் அலசி ஆராயப்பட்டன. பாடசாலை முகாமைத்துவம், உள்ளகமேற்பார்வை, கற்றல் உபகரணப் பயன்பாடுகள், மாணவர்களது கற்றல் பேறுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்,
 பாடசாலையின் சுற்றாடலின் ஒழுங்குமுறைகள் போன்றன பற்றியும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக வலய மட்டக்குழுவிற்குத் தலைமைதாங்கிய உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ஜமால்தீன் அவர்கள் தெரிவித்தார். பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.ஏ. நயீம் அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும் வருகைதந்த வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கி பாடசாலையின் கற்றல்பேறு உயர்வடைய தங்களது கல்வி நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், விருத்திச் செயற்பாடுகள் பற்றியும் அங்கு வருகை தந்திருந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :