இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள் மற்றும் உயரிஸ்தானிகர்களை நாட்டுக்கு அழைத்து அவர்களது பணி தொடர்பில் விளக்கமளிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள தூதுவராலயங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசுக்கு முறைபாடுகள் பல கிடைத்துள்ள நிலையில் அதுதொடர்பில் ஆராயப்படுமெனவும் எதிர்காலத்தில் தூதுவராலயப் பணிகளை வேறுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை எதிர்வரும் மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை தொடர்பான கூட்டத்தொடரை இலக்காகக்கொண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளின் உதவியுடன் ஏனைய நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தூதுவர்களை சந்திக்கும் போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment