பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் இன்று (08) காலை 40 வயது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் கெம்பியன் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்த சுதாகர் என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (08) காலை 7.30 மணி அளவில் அவருடைய வீட்டில் இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment