தன்னைக் கற்பளித்த காமுகனைக் காட்டிக்கொடுத்த சிறுமியை உயிருடன் எரித்த காடையர் குடும்பம்.


இந்தியா  அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர்கள் இருவரும் வியாபாரிகள் என்பதால் வீட்டில் இல்லை. அப்போது, பக்கத்தில் வீட்டிலிருந்த காமக்கொடூரன் ஒருவன் அந்த மாணவியை கற்பழித்துள்ளான். பெற்றோர்கள் வீடு திரும்பியதும் மாணவி தமக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றுள்ளனர். அப்போது அந்தகாமக்கொடூரனின் உறவினர்களுக்கும்கற்பழி்க்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த காமக்கொடூரனின் உறவினர்கள் அந்த பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்

இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுது்து பெண் உரிமை சங்கத்தினர் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு கொண்டு சென்றதை அடுத்து பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது

டில்லியில் ஓடும் பஸ்சில்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கி வரும் நிலையில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பின்மையில் உள்ள குறைபாட்டை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :