திவிநெகுமவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு..

(றிப்தி அலி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடர் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுவிற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, திவிநெகும சட்டமூலத்திற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த திருந்தங்களை ஏற்கொண்ட அமைச்சர் பசில் அடுத்த மூன்று மாதங்களிற்குள் இந்த திருத்தங்களை திவிநெகும சட்டமூலத்திற்கு உள்ளடக்குவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்தே திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுகாற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :