சபீர் அஹமத்: கடந்த 2012 மார்கழி மாத கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகையினை முன்னிட்டு வருமானத்தினை மட்டும் இலக்காகக் கொண்டு வியாபாரிகளுக்கு கடைகள் விநியோகிக்கபபட்டன. இதன்போது முறையான அறிவுறுத்தல்கள், அணுகுமுறைகள் வழங்கப்படாத நிலையில் இன்று மன்னார் மைதானமானது குப்பை மேடாக மாறியுள்ளது
.
இம்மைதானமானது புதுவருடப்பண்டிகை முடிந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் கூட இதுவரையிலும் வியாபாரிகளினால் மைதானத்தில் விட்டுச்சென்ற கழிவுகளை அகற்றாமையானது நோய்க்கிருமிகளை தோற்றுவிப்பதற்கும், தொற்றுநோய்களை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது. அத்துடன் நிலவி வருகின்ற காலநிலை சீரின்மையானது இந்நிலையினை துரிதப்படுத்துகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நகரசபைக் குட்பட்ட மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான எதுவித பொருத்தமான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாமலிருப்பது மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும், அதற்கான நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறும் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment