2013ம் ஆண்டில் முதலாந்தரத்திற்கு சிறார்களை உள்வாங்கும் நிகழ்ச்சி நாளை


(எஸ்; எல். மன்சூர்)


நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட அரச உதவிபெறும் உதவிபெறாத தனியார் பாடசாலைகளில் 2013ம் ஆண்டுக்கான முதலாந்தரத்திற்குச் சிறார்களை உள்வாங்கும் தேசிய நிகழ்வு நாளை(17.01.2013) நடைபெறுகின்றது. இன்றைய தேசிய நிகழ்வு கிழக்குமாகாணம் திருகோணமலையில் இடம்பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து நாட்டின் சகல பாடசாலைகளிலும் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவேண்டுமென கல்வியமைச்சு சகல கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலைகளின் (அரம்ப வகுப்புக்கள் உள்ள பாடசாலைகள்) அதிபர்களையும் கேட்டுள்ளது.

முதலாந்தரத்தில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு முறையாக அழைத்துச் சென்று முறைப்படி வகுப்புக்களை ஆரம்பிக்கும் நிகழ்வை விழாவாக பின்வரும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நடைபெற வேண்டுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 புதிய சிறார்களை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலைகக் கொடிகளை ஏற்றுதல், தேசி கீதம் மற்றும் பாடசாலைக் கீதம் இசைத்தல், சமய ஆராதனையில் ஈடுபடல், புதிய சிறார்களை வரவேற்பதற்காக இடண்டாந்தர மாணவர்களின் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியவாறு கலை நிகழ்வொன்றினை நடாத்துதல், ஆரம்பக்கல்வி தொடர்பாக கல்விமறுசீரமைப்பு தொடர்பாகவும், முதலாந்தரத்தின் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் மற்றும் குறிக்கோள், தொடர்பாகவும் முதலாந்தரத்திற்கு உள்வாங்கும் சிறார்களின் பெற்றோருக்கு அறிவூட்டஞ் செய்தல் என்பனவும் நடைபெறுதல் வேண்டுமெனவும், இந்நிகழ்வின்போது எச்சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் விதத்தில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுதலையும் அதிபர்கள் உறுதிப்படுத்துவதுடன், இந்நிகழ்வுகளில் சமயத்தலைவர்கள், அரசியல் தலைவர்களின் தலைமையில் நடாத்தப்படுவதும் முக்கியமாகும் எனவும் கல்வியமைச்சின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 பாடசாலை மட்டத்தில் நடைபெறும் இவ்விழா பற்றிய அறிக்கையை உரிய வலயக் கல்விப்பணிப்பாளருக்கு சகல அதிபர்களும் அறிக்கைப்படுத்துமாறும் கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.எம். கோட்டாபய ஜயரத்ன வேண்டிக்கொள்வதாகவும் அந்தக் கடித்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :