முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி

Share on
கண்டி, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் கடந்த ஒருவாரத்துக்கு முன், முஸ்லிம் மாணவர்களுக்கு எவ்வித அறிவிப்பையும் விடாது உணவுடன் பன்றி இறைச்சி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் இவ்விவசாயக் கல்லூரியில் பன்றி இறைச்சி சமைத்துக் கொடுக்கப்படுவதானது முஸ்லிம் மாணவர்களிடத்தில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.இதனை அ
டுத்து இவ் விவகாரத்தை குறித்த கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோதும் அவர் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் தொடர்ச்சியாக முஸ்லிம் மாணவர்கள் முதல்வரை கவனம் செலுத்துமாறு கோரி வந்த நிலையில் தற்போது கல்லூரியில் பன்றி இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டுள்ளது.எனினும் பன்றி இறைச்சி சாப்பிடும் மாணவர்களுக்காக வெளியிலிருந்து பன்றி இறைச்சி சமைத்து தருவிக்கப்படுகின்றது.



பன்றி இறைச்சி சமைக்கப்பட்ட காலங்களில் முஸ்லிம் மாணவர்கள் பன்றி கறி சாப்பிடுமாறும் இல்லாவிடத்து வெளியே சென்று சாப்பிடுமாறு கல்லூரி முதல்வரால் கட்டளையிடப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ்வருடம் கல்லூரி உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகையில் பன்றி இறைச்சிக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளத்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


இதுக்கு உங்கள் கருத்து என்னவாக இருக்கும் இன்னும் பல செய்திகளைத்தருகிறோம் எனவே கீழே உள்ள பேஸ்புக் பக்கம் லைக் ஐ கிளிக் பன்னி விடுங்க நன்றி,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :