
அக்கரைப்பற்றில் ஏற்கனவே மீராவோடையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவோடு சேர்ந்த அபிவிருத்தியை மக்கள் பயன்படுத்திய சமுர்த்தி வங்கி வீதி அழிக்கப்பட்டு அவ்வீதி இருந்த இடத்தில் உல்லாச உணவு விடுதி அமைக்கப்படுகிறது மேலும் இவ் மீரவோடையின் மேற்கிலும், கிழக்கிலும் இருக்கும் இரண்டு வீதிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து முற்றாக இல்லாமல் செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதனை உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் தலையிட்டு இதனை நிறுத்தி மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு வழங்குமாறு முதலமைச்சரிடம் வேண்டிக்கொள்கிறேன். என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
கிழக்கு மாகாணசபையின் வரவு செலவுத்திட்ட விவாதம் (11.12.2012) இடம்பெற்றவேளையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்- கிழக்கு மாகாணத்திலுள்ள முதலமைச்சருக்கு கீழே வருகின்ற திணைக்களமாகிய உள்ளுராட்சி மாகாணசபை உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு நிகழ்விலே உரையாற்றக்கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமாக அக்கரைப்பற்றில் இருக்கும் அக்கரைப்பற்று மாநகரசபை எல்லைக்குள் நடக்கின்ற குறிப்பாக புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஒரு முறைகேட்டினைப்பற்றி இந்த சபையில் பேசுகின்ற தேவை எனக்கிருக்கிறது உள்ளுராட்சி மன்ற எல்லைக்குள் மக்களுக்கான வீதித்தேவை, அதே போன்று மின்சாரத்தேவை போன்ற இன்னும் பல கட்டுமானத்தேவை என்ற பல விடயங்கள் உட்கட்டமைப்பு அவிபிருத்தி வேலைகள் இருக்கின்றபோது புறநெகும திட்டத்தின் கீழ் இரண்டு பூங்காக்கள் அமைக்க வேண்டிய தேவை ஒரு நாளும் ஏற்படாது அப்படியான நேரத்தில் அக்கரைப்பற்றில் இரண்டு பூங்காக்கள் ஏன் அமைக்கப்படவேண்டும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பது அந்த உள்ளுராட்சி எல்லைகளுக்கிடையில் இருக்கின்ற அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்கின்ற ஒரு அமைப்பாக இருக்கவேண்டுமே தவிர அவ் அமைப்பு மக்கள் ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருக்கின்ற சேவைகளை பறித்தெடுக்கின்ற வேலைகளை செய்துவிடக்கூடாது இவ் வீதி பாடசாலை, சமுர்த்தி வங்கி, சுகாதார நிலையம், பள்ளிவாசல், குர்ஆன் மத்ரசா போன்றவற்றிற்று செல்லும் பாதையாக இருப்பதனால் இதனை மீண்டு;ம் மக்களுக்கு வழங்குவது மிக அத்தியவசியமானதாகும் என்றும் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment