என்.சப்னாஸ்-
கெயார் நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவின் வேண்டுகோளின் பிரகாரம் டெங்கு காச நோய் விழிப்புணர்வு மற்றும்; சீனி பரிசோதனையும் கி.அ.மு.குழு காரியாலயத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.;; தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளதாரிகளாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.சித்தீக் டெங்கு தொடர்பாகவும் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ரி.சலீம் காச நோய் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டுவதனையும் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.மூர்த்தி இரத்தப்பரிசோதனை மேற்கொள்வதனைப் படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment