(எஸ்.எம்.அறூஸ்)
சாய்ந்தமருது பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கு பொருளாதார அமைச்சின் கீழ் உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அன்வர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்;.
அம்பாரை மாவட்டத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவில் பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நியமனம் வழப்படுவதில் நீண்ட இழுபறி நிலை இருந்து வந்தது.
இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெருத்த முயற்சி எடுத்து அதற்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பசீர், பிர்தௌஸ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜின்னா, பிரத்தியகச் செயலாளர் தௌபிக் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உரையாற்றும் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்நாட்டிற்குக் கிடைத்த மிகச்சிறந்த ஒரு தலைவராவார். அவர் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாட்டிற்கு அப்பால் எல்லோரும் ஒரே இனம் என்ற பார்வையில் தனது கடமைகளைச் செய்கின்றார்.
அதி உச்ச இறையான்மை மக்களிடமே உள்ளது. அவ்வாறான இறையான்மை கொண்ட மக்களினாலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். மக்களின் இறையான்மைக்கு முன் எந்தத் துறைகளும் முதன்மை பெறமுடியாது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக எத்தனையே திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் தலைவருக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்ளவேண்டும். அதேநேரம் சமூகம் என்று வருகின்றபோது சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத்தான் எங்களை அர்ப்பணிப்போம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் கட்சியை சரியான வழியில் வழிநடத்திச் செல்கின்றார். இந்த நியமனம் கிடைப்பதில் அவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.





0 comments :
Post a Comment