நியூடவுன்: அமெரிக்காவில் கனெக்டிக்கட் என்ற இடத்தில், பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனெக்டிக்கட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹூக் என்ற பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து சுமார் 27 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த சம்பவத்தால் தனது இதயமே உடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
பொது இடங்களில் மன நோயாளிகளைப் போல திடீரென கூட்டத்தை நோக்கி கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுடும் போக்கு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment