ம க்கள் எழுச்சியின் பின்னர் எகிப்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் வரையப் பட்ட எகிப்தின் புதிய உத்தேச அரசியல் யாப்பு மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகியது.
இந்த வாக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக 15 ஆம் திகதியும் 22 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது .
ஜனாதிபதி முர்ஷி அரசாங்கத்தால் வரையப்பட்டுள்ள உத்தேச அரசியல் அமைப்பை அங்கீகரிப்பதற்கான மக்கள் ஆம் என்று வாக்களிக்குமாறு இஸ்லாத்துக்கு ஆம் என்று கூறுமாறு இஸ்லாமிய அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை மதசார்பற்றோர், இஸ்லாத்தை எதிர்ப்போர் உத்தேச அரசியல் அமைப்பை நிராகரித்து வாக்களிக்குமாறு கோரியுள்ளனர் .
கடந்த நாட்களாக தொடராக உத்தேச அரசியல் யாப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது. வெள்ளிகிழமை இடம்பெற்ற உத்தேச அரசியல் யாப்புக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதேவேளை எதிர் தரப்பில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
அதேவேளை வெளிநாட்டில் வாழும் எகிப்தியர்கள் புதன்கிழமை தொடக்கம் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக உச்சாகமாக வாக்களித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது . நாளை தொடங்கப் போகும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேச அரசியல் யாப்பு பாரிய ஆதரவை பெற்று நாட்டின் யாப்பாக மாற்றம் பெரும் என்று பரவலாக நம்பப் படுகிறது .
0 comments :
Post a Comment