அமெரிக்க பள்ளியில் 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றது ஏன் என்பது குறித்து புதிய தகவல்



அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நான்சி லேன்சா. இவரது மகன் ஆடம் லேன்சா(வயது 20).

இவனுக்கு தனது தாய் மீது கோபம் இருந்த காரணத்தினால், அவரை தீர்த்துக் கட்டும் ஆவேசத்துடன் முகமூடி கொண்ட கறுப்பு உடைகளை அணிந்து கொண்டான்.

தனது தாயுடனேயே பள்ளிக்கு சென்றுள்ளான், காரின் உள்ளே ஒரு துப்பாக்கி, தனது உடைக்குள் 2 துப்பாக்கிகள் என 3 துப்பாக்கிகளை தன்னுடன் கொண்டு சென்ற அவன் முதலில் தனது தாயாரை சுட்டுக் கொன்றான்.

பின்னர் ஆவேசம் அடைந்த ஆடம் பள்ளியில் இருந்த குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு சாய்த்தான். அதன் பிறகும் கொலைவெறி தணியாமல், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களையும் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இதற்கிடையே மற்றொரு செய்தி நிறுவனம், தனது தாயாரை அவர் வீட்டில் வைத்து, முகத்தில் சுட்டுக் கொன்ற பின்னர் தான் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார் என தெரிவிக்கின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஆடம் லேன்சாவின் அண்ணன் தியான் லேன்சாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

27 பேரை சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஆடம் லேன்சா, சமீபகாலமாக மனநிலை பாதித்தவன் போல் இருந்தான் என அவனது அண்ணன் ரியான் லேன்சா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :