Share on
(அட்டாளைச்சேனை நிருபர்)
வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள பாதையின் பெயரை தமிழ்ச் சங்கப் பாதை என்று பெயர் வைத்துள்ளதை மாகாண முதலமைச்சர் தடைசெய்திருப்பதை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வண்மையாகக் கண்டிப்பதாக அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வை.எல்.எஸ்.ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெள்ளவத்தை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம். அதிலும் குறித்த பாதையில் கூடுதலான தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலையில் அந்தப் பாதைக்கு தமிழ் பெயரை சூடியதை தடுப்பது என்பது இனவாத சிந்தனையின் வெளிப்பாடாகும்.
இந்நாட்டில் சுமார் 30 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். கொழும்பு மாநகரத்திலும் கணிசமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். தேன் இன்பத் தமிழ் கொழும்பு மாநகரிலும் இனிப்பதற்கு கொழும்பு தமிழ் சங்கம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அளித்து வருகின்ற பங்களிப்பு அளப்பரியது.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பது எமது நிலைப்பாடாகும். தமிழ் சங்கம் என்பது தமிழ் கூறும் நல்லுலகின் சொத்தாகும். எனவே அத்தமிழ்ச் சங்கத்தின் பெயரை சூட்டுவதற்கு தடை விதித்திருப்பது என்பது நம் தாய்த் தமிழை இழிவு படுத்துவது என்பதாகும்.
மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமூக நல்லிணக்கத்தை வளர்க்க முற்படுவதாக கூறப்படுகின்ற ஒரு காலகட்டத்தில்தான் தலை நகரின் தமிழ் வளர்ச்சியின் ஒரு அங்கமான தமிழ்ச் சங்கத்தின் பெயர் பாதைக்கு சூட்டப்படுவது என்பது தமிழ் பேசும் சமூகங்களை கௌரவிப்பதாகும் என்பது மட்டுமல்லாது அது அவர்களின் உரிமையுமாகும்.
எனவே, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவுமே இல்லை. உடனடியாக முதலமைச்சர் தனது தடையை வாபஸ் பெற்று குறித்த பெயரை அப்பாதைக்கு சூட்டுவதற்கு இடமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(அட்டாளைச்சேனை நிருபர்)வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள பாதையின் பெயரை தமிழ்ச் சங்கப் பாதை என்று பெயர் வைத்துள்ளதை மாகாண முதலமைச்சர் தடைசெய்திருப்பதை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வண்மையாகக் கண்டிப்பதாக அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வை.எல்.எஸ்.ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெள்ளவத்தை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம். அதிலும் குறித்த பாதையில் கூடுதலான தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலையில் அந்தப் பாதைக்கு தமிழ் பெயரை சூடியதை தடுப்பது என்பது இனவாத சிந்தனையின் வெளிப்பாடாகும்.
இந்நாட்டில் சுமார் 30 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். கொழும்பு மாநகரத்திலும் கணிசமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். தேன் இன்பத் தமிழ் கொழும்பு மாநகரிலும் இனிப்பதற்கு கொழும்பு தமிழ் சங்கம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அளித்து வருகின்ற பங்களிப்பு அளப்பரியது.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்பது எமது நிலைப்பாடாகும். தமிழ் சங்கம் என்பது தமிழ் கூறும் நல்லுலகின் சொத்தாகும். எனவே அத்தமிழ்ச் சங்கத்தின் பெயரை சூட்டுவதற்கு தடை விதித்திருப்பது என்பது நம் தாய்த் தமிழை இழிவு படுத்துவது என்பதாகும்.
மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமூக நல்லிணக்கத்தை வளர்க்க முற்படுவதாக கூறப்படுகின்ற ஒரு காலகட்டத்தில்தான் தலை நகரின் தமிழ் வளர்ச்சியின் ஒரு அங்கமான தமிழ்ச் சங்கத்தின் பெயர் பாதைக்கு சூட்டப்படுவது என்பது தமிழ் பேசும் சமூகங்களை கௌரவிப்பதாகும் என்பது மட்டுமல்லாது அது அவர்களின் உரிமையுமாகும்.
எனவே, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவுமே இல்லை. உடனடியாக முதலமைச்சர் தனது தடையை வாபஸ் பெற்று குறித்த பெயரை அப்பாதைக்கு சூட்டுவதற்கு இடமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment