Share on
காத்தான்குடி-5, ஊர் வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி கிளை முகாமையாளருமான அஹமட் லெவ்வை பழுலுல்லாஹ் தனது 52 ஆவது வயதில் நேற்று நல்லிரவு 11.30 மணியலவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஊடகத் துறையில் மிக நீண்டகாலம் சேவையாற்றிய இவர், முஸ்லிம் சமூக நலனுக்காக அரும்பாடுபட்டவர்.
இவர் பாத்திமா பௌசியா(நகரசபை-காத்தான்குடி)வின் கணவரும், முகம்மது பர்தான்(கட்டார்), அல்-ஹாபிழ் பாஸி பஹ்ஜான்(அப்பாஸியா அரபுக் கல்லூரி-காலி), பாஸுல் பர்ஹான் (ஊடகவியலாளர்), பாத்திமா றஸ்ஹானா(முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரி- கல்லெலியா), பஸ்லுல் ரஹ்மான், பாத்திமா பதீனா ஆகியோரின் தந்தையும், தொழல்நுட்ப உத்தியோகத்தர்; றூஹுல்லா, ஏ.எல். இஸ்ஹாக்(கட்டார்), ஏ.எல். மன்சூர் ஆகியோரின் சகோதரருமாவார்.
ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவரது மறைவால் துயருரும் உறவினர்களுக்கு இம்போட்மிரர் குடும்பம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அன்னாரது சுவன வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறது.
0 comments :
Post a Comment