Share on
.
நீதித்துறையின் உயர் பதவியான பிரதம நீதியரசர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவை நியமிக்கலாம் என கொழும்பு மாநகர சபை யின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிறைவேற்றுத்துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார்.சட்டவாக்கத்துறையின் உயர் பதவியில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளார்.எனவே நீதித் துறையின் உயர் பதவியான பிரதம நீதியரசர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவை நியமிக்கலாம்.என்றார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்க் கட்சிகள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment