செவ்வாய் கிரகத்தில் குடியிருக்க ஆட்கள் தேவையாம் நீங்க ரெடியா..

Share on

அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேர்..

செவ்வாய் கிரகத்தில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மக்கள் எடுத்து வருவதாக ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனம் அறிவித்துள்ளது.

பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று ஸ்பேஸ்எக்ஸ் சாதனை படைத்தது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.

இது தொடர்பாக லண்டனில் உள்ள றொயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், முதல்கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

பின்னர் படிப்படியாக அதிக அளவிலானோர் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயித்துள்ளோம்.

முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9" விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும்.

செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர் சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள்.

அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :