கிழக்கு மண் வாரப்பத்திரிகை கிழக்கில் உதயம்

Share on
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை, திருகோணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை பிரதானமாக மையப்படுத்தி ‘கிழக்கு மண்ணின் நடுநிலைக்குரல் – கிழக்கு மண்’ எனும் பெயர் தாங்கி வாராந்தப்பத்திரிகை இன்று கிழக்கு மாகாணத்தில் மட்டு-காத்தான்குடி பிரதேசத்தில் உதயமானது.

கிழக்கு மண் வாரப் பத்திரிகையின் அறிமுக விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இ.போ.ச. காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.பழுலுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமாண எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்பத்திரிகையின் முதற்பிரதியை மட்டு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் பரவலர் வீ.ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி கிழக்கு மண் வாரப் பத்திரிகை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மண் பிரதம ஆசிரியர் ரீ.எல்.ஜவ்பர்கான் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத்தலைவர் உப தலைவர் அலியார் பலாஹி கவிமனி எம்.எச்.எம்.புகாரி பலாஹி, மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி டிக்கிரி பண்டார த.தே.கூ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தண்டாயுதபாணி வெள் ளிமலை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , காத்தான்கு நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்’ அலி சப்ரி, சல்மா அமீர் ஹம்ஸா, கிழக்கு பல்பலைக்கழக விரிவுரையாளர் நஸ்மல் பலாஹி மட்டு-மாநகர ஆணையாளர் சிவநாதன், தொழிலதிபர் கலீல் , மட்டக்களப்பு பதில் நீதவான் நூர்தீன் காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் பாறூக், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு அதிகாரி றுஸ்வின், மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஜோர்ஜ் மற்றும் ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், உலமாக்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்களி அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன் போது கௌரவ சிறப்பு அதிதிகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கிழக்கு மண் வாரப் பத்திரிகை பிரதிகள் வழங்கப்பட்டதுடன், பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிழக்கு மண் பிரதம ஆசிரியர் ரீ.எல்.ஜவ்பர்கானினால் கிழக்கு மண் வாரப் பத்திரிகை பிரதியும் வழங்கிவைக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :