கல்முனை சாஹிறாவுக்கு "Broiler" Project பழைய மாணவ பிரதிநிதிகளால் முன்வைப்பு!



ல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் உள்ளடங்கிய பாடசாலை நிர்வாகத்தினருக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் கடந்த 25.03.2023 ஆம் திகதி இடம்பெற்றது.

காலை மு.ப 10.30 இற்க்கு தொடங்கி பி.ப 3.00 வரை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து விரிவாக அறியப்பட்டதோடு அதற்கு தடையாக உள்ள விடயங்கள் பழைய மாணவர்களின் முக்கிய பிரிவினால் கோடிட்டுக் காட்டப்பட்டன. மேலும் பாடசாலையின் விடுதியினை பழைய நிலமைக்கு கொண்டுவந்து மாணவர்களை தங்க வைத்து பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் "Broiler" Project எனும் திட்டம் பழைய மாணவர்களின் முக்கிய பிரதி நிதிகளால் முன்மொழியப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பழைய மாணவர்கள் சார்பாக பொறியியலாளர் A.H.A.ஜெளஸி, பொறியியலாளர் M.I.M.றியாஸ், ஜூனைதின் மான்குட்டி, றிசாட் சரிப், பொறியியலாளர் கமால் நிசாத், A.M.ரம்ஸான், A.M.M.சாஹிர் மற்றும் A.M.சனூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை சார்பாக அதிபர்,பிரதி அதிபர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர், பாடசாலை முகாமைத்துவக் குழுவின் செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பிராந்தியத்தில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கும் வெளியீடுகள் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது கவலைப்படும் அளவில் குறைந்து காணப்படுவதை அவதானித்த, பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இணைந்து; சமூக ஊடகங்களில் குழுமங்களை உருவாக்கி விவாத்தித்தன் பயனாக குறித்த சந்திப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :