Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுஅஷ்ரப் ஏ சமத்-
லஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த பலஸ்தீன் நாட்டினை இஸ்ரேவிலிடமிருந்து விடுவிப்போம் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை 29 பி.எம்.ஜ.சி.எச்ல் நடைபெற்றது. இந் நிகழ்வு பலஸ்தீன் மக்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினத்தைக் கடைப்பிடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவா் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் விமல் ரத்னாயக்க, ஜக்கிய நாடுகள் இலங்கைக் காரியாலயத்தின் வதிவிடப் பிரநிதி ஹனா சிங்கா், இத்துறை சாா்ந்த ஆராய்ச்சியாளா் திரு.குசும் விஜயதிலக்க, பலஸ்தீன் துாதுவா் கலாநிதி சுகைர் மொஹமட் ஹம்துல்லா செய்யத் இக்குழுவின் உபதலைவரும் சன்டே டைம்ஸ் .சிரேஸ்ட ஊடகவியலாளா் அமீன் இஸ்ஸடீன், ஆகியோா்களும் உரையாற்றினாா்கள்.
இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் ஜே.வி.பி.பி அங்கத்துவருமான விமல் ரத்ணாயக்க தெரிவிக்கையில் -

1948 - 1966 வரையிலான காலப் பகுதியில் இஸ்ரேலிலிருந்த பலஸ்தீனா்களில் சுமாா் 85 சதவீதமானனோர் வாழ்ந்த இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள மூன்று பிரதேசங்களில் ஆகும். இங்கு இராணுவ ஆட்சி 1967 இல் முடிவுற்றாலும் அதே நிலைமைக்கு சமாந்தரமான நிலைமை தற்போதும் காணப்படுகின்றது.
ஒஸ்லோ உடன்படிக்கையின் படி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 80 சதவிதமான சீ பிரிவின் நிர்வாகம் முழுமையாக இஸ்ரேலின் கீழ் உள்ளது.
தாமதமின்றி 55 வருட காலமாக இடம்பெற்றவரும் பலஸ்தீன் மற்றும் சிரிய பிரதேசங்களின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும்.
சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு முழுமையாக இணங்கல் வேண்டும்.
இஸ்ரேலின் தரப்பில் தொடா்ந்து நிரகாரிப்பது தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடா்பாக உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி கருத்து பெறப்படல் வேண்டும். என உரையாற்றினாா்

உபதலைவரும் சன்டே டைம்ஸ் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அமீன் இஸ்சடீன் - இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டுக்குழு பின்வரும் தீர்மாணங்களை முன்மொழிந்து ஜக்கிய நாடுகள் வதிவிடப்பிரநிதியிடம் கையளிக்கப்பட்டது. அவ் மும்மொழிகளாவன-
காலனித்துவத்தை அதன் அனைத்து வெளிபாடுகளிலும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் மக்களின் சுதந்திரப் போரட்டத்திற்கு ஆதரவளிப்பதற்குமான தார்மீகப் பொறுப்பை இலங்கைக்கு மக்களுக்கும் பரந்த சர்வதேச சமுகத்திற்கும் நினைவூட்டுதல்.
பலஸ்தீன் மக்களின் சுதந்திரத்திற்கான தீவிர ஏக்கத்தை மற்றும் அவா்கள் சுதந்திரத்திற்காக போரடுவதற்கான உரிமையை அங்கீகரித்தல்.
ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பலஸ்தீன் மக்களின் சுதந்திரப் போராட்டங்களை சர்வதேச சட்டம் அங்கீகரிப்பதைக் குறிப்பிடுதல்.
பலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலை வெளிறுமாறும் ,இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் ஆதரவாக 185க்கும் மேற்பட்ட தீர்மானங்களை ஜக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
1917ஆம் ஆண்டின் மிகவும் கண்டிக்கத்தக்க பால்போர் பிரகடனத்தின் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் கைப்பற்றப்பட்ட பலஸ்தீனத்தின் ஓட்டோமன் பிரதேசத்தில் இஸ்ரேல் ஒரு சட்ட விரோத நிறுவனம் என்பதனை மீண்டும் உறுதிபடுத்துதல்.
இஸ்ரேலிய போா்க்குற்றங்கள் தொடா்பான பல்வேறு ஜக்கிய நாடுகளின் ஆணைக்குழு கண்டுபிடிப்புக்களை ஆமோதிப்பதோடு குறிப்பாக கிழக்கு ஜெருசலமே மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் ஜக்கிகய நாடுகளின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அக்டோபா் 20.2022 அறிக்கை ஏற்றுக் கொள்ளுதல். பலஸ்தீனுடான ஓருமைப்பாட்டுக்கான இலங்கைக்குழுவின் சில தீர்மாணங்கள்......

ஜ.நா.தீர்மானங்களைத் தொடா்ந்து மீறும் இஸ்ரேல் மீது சர்வதேச சமூகம் கடுமையான தடைகளை விதிக்கத் தவறியது. குறித்து அதனது கவலையை வெளிப்படுத்துகிறது.
பலஸ்தீன் மீதான அதன் ஆக்கிரமிப்பு அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலை நிர்பந்திக்க உலக சமூகம் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சி மற்றும் முற்போக்கான அணிசேரா கொள்கைக்கு இணங்க பலஸ்தீன பிரச்சினைக்கு தனது ஆதரவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றது.

இவ் தீர்மாணங்கள் இன்று பி.ஜ.எம்.சி.எச்சில் நடைபெற்ற பலஸ்தீன் மக்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டு தினத்தினை சமுகமளித்தவா்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.