காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி நடராஜானந்தாவின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு!காரைதீவு சகா-
சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா மகராஜின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று(29) செவ்வாய்க்கிழமை அவர் பிறந்த காரைதீவு மண்ணில் நடைபெற்றது .

காரை இந்து சமய விருத்தி சங்க தலைவர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக காரைதீவுப்பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டார் .
சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்கள் அதிபர்கள் சுவாமியின் உறவினர்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக சுவாமியின் உறவினரான ஓய்வு நிலை ஆசிரியர் த. அருணாசலம் நந்திக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உரைகளிடம்பெற்றன.
மன்ற செயலாளர் கு.ஜெயராஜி பஞ்சராத்தி காட்டி பூஜை இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :