யுத்த வடுக்களை சுமந்த ஏழை மாணவர்களுக்கு 150 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சினூடாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் வழங்கி வைத்தார்.
வாழ்வாதார உதவியின்றி அவதியுறும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மாணவ மாணவிகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் சுமார் 150 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
இந்தப் பகுதி மக்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களிடம் விடுத்த கோரிக்கையடுத்து உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட அவர் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சினூடாக இந்த துவிச்சக்கர வண்டிகளை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.
முல்லை அரச அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சாந்தி மற்றும்
ஏராளமான பொதுமக்களும் பயனாளிகளும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதி சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது
முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து கஷ்டங்கள் காரணமாக பாடசாலை செல்வதில் இடர்களை எதிர்நோக்கியிருந்த மாணவர்களின் துயர்துடைக்க கெளரவ காதர் மஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுதற்குரியது.
யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இம்மாணவர்களின் பிரச்சினைகளை உடனடியாக அவர் எமது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் நல்லிணக்க பொருளாதார வலுவூட்டல் திட்டத்தின் கீழ் இந்த துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொடுத்து
தனது மக்களின் வாழ்வதாரம் மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் மேம்பாடு காண பாடுபட்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு படகு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -