பாறுக் ஷிஹான்-
சர்வதேச தரத்திலான நவீன மருத்துவச் சேவைகளைப் பிராந்திய மக்களுக்கு வழங்கும் நோக்கில், சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (JMH Diagnostic & Specialists Infirmary) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோருக்கான நவீன மருத்துவப் பரிசோதனை நிலையமும், ‘GLOBAL SKILLS HUB’ திறன் அபிவிருத்தி மையமும் நேற்று (1) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டன.
மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களின் மருத்துவப் பரிசோதனைத் தேவைகளை இலகுவாகவும், விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் பூர்த்தி செய்வதுடன், பிராந்திய மக்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் நோயாளர்களுக்கும் மேம்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் இப்புதிய வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் முகாமையாளர் யூ.எல்.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளரும், பிரபல வைத்திய நிபுணருமான டொக்டர் றிஸான் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய நிலையங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதன்போது உரையாற்றிய டொக்டர் றிஸான் ஜெமீல், இப்புதிய மையங்களின் ஆரம்பமானது சாய்ந்தமருது பிரதேசத்தின் மருத்துவத் துறை வளர்ச்சிக்கு மாத்திரமன்றி, நாட்டின் சுகாதாரச் சேவைகளின் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லத் தயாராகும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைத் தேவைகளைத் துரிதமாகவும் நம்பகமான முறையிலும் நிறைவேற்றுவதற்கு இந்நவீன மருத்துவப் பரிசோதனை நிலையம் பெரிதும் உதவும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து மருத்துவத் தேவைகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கும், பிராந்தியத்தில் வாழும் பொதுமக்களுக்கும் தேவையான மருத்துவச் சேவைகளை வழங்குவதில் இந்நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவப் பரிசோதனை வசதிகளுடன் ‘GLOBAL SKILLS HUB’ திறன் அபிவிருத்தி மையமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இப்புதிய முன்னெடுப்பு, பிராந்தியத்தில் நவீன மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுவோரின் மருத்துவப் பரிசோதனைச் செயற்பாடுகளையும் இலகுபடுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 comments :
Post a Comment