கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் மீண்டும் பணிக்கு திரும்பியதையடுத்து, அவரது நலன், ஆரோக்கியம் மற்றும் பணிச் சிறப்புக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று (24) வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் கணக்காளர் எம்.ஆர். நாஷீமுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் பிரதான கதீப் மௌலவி அஷ்-ஷேக் அமானுல்லாஹ் முகம்மது அர்ஹம் (அஜ்வாத்) துஆ பிரார்த்தனையை நடத்தினார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனின் நலன், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
மேலும், அவர் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி, வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்கும் இறைவன் அருள்புரிய வேண்டும் என துஆ பிரார்த்தனையின் போது வேண்டிக்கொள்ளப்பட்டது.

0 comments :
Post a Comment