சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (International Human Rights Global Mission – IHRGM) அமைப்பின் கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நேற்று (23) நடைபெற்றது.
அமைப்பின் தேசியத் தலைவர் ஏ.ஆர். அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில், அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எல். றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ. அப்ரோஸ், எம்.பி. நூமைசா, எஸ்.எப். சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அமைப்பின் நோக்கங்கள், எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், கல்முனைப் பிரதேசத்தில் இரத்ததான முகாம்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தல், இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில், IHRGM அமைப்பின் பிரதி பணிப்பாளர்களான எம்.எச்.எப். சாஹானா பானு, எம்.எப்.எப். அக்ஸா, இணைப்பாளர்களான ஜே.எப். சுஜிமா, எம்.ஆர். எம்ரோசான், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், ஏ.எம்.எப். ரிபா, ஆர்.எம். ரூமி, ஐ. ஜாபீர் மற்றும் அங்கத்தவரான செயின் நௌபல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.











0 comments :
Post a Comment