சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் இருந்து இம்முறை பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக சவால்களை ஈமானுடன் எதிர்கொள்வோம் எனும் கருப்பொருளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளை ஒழுங்கு செய்திருந்த இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (09) ஜம்இய்யாவின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் தலைவர் மீராசாஹிப் சலீம் மௌலவி தலைமையில் அதன் செயலாளர் நப்றாஸ் ஹனீபாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒலுவில் கிளைத் தலைவர் ஏ.எல். பைஸல் கலந்து கொண்டார்.
அத்துடன் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டொழுங்கு முறைமைகளை வலியுறுத்தி நுஸ்கா மௌலவியா
உரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது பிரதேச பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் முஹம்மட் செளபி நன்றியுரை நிகழ்ந்தினார்.

0 comments :
Post a Comment