பல்கலை மாணவர்களுக்கு மடி கணனிகள்; நலிந்த ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா! ஹாஷிம் உமர் பௌண்டேசனின் 24ஆவது கட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம்



ல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஹாஷிம் உமர் பௌண்டேசனால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச மடிக்கணினி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆவது கட்ட விநியோக நிகழ்வு இன்று (08) கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்,சுயாதீன தொலைக்காட்சி தமிழ் செய்திப் பிரிவு முகாமையாளர் முஹம்மட் இர்ஃபான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, எஸ்.கே. குயின்ஸ் கம்பஸ் ஸ்தாபகரும் விரிவுரையாளருமான கலாநிதி சப்னா சிபான், எப்.எம். ராஜ் குமரன் ராஜ் குமரி நிலையத்தின் பணிப்பாளர் பாலில் முபாரக், ரிக்கா டிரேடர்ஸ் உரிமையாளர் ரிகாஸா மஸாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, ஹாஷிம் உமர் பௌண்டேசனின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட், இஸ்ரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது எம்.ஏ. அமாயா – திஸ்ஸபுர, பதுளை; எஸ்.எப். இபா – நற்பிட்டிமுனை; என். லக்‌ஷிகா – கொடிகாமம், மிருசுவில்; எம்.ஆர்.எப். றைஹானா – கலேவலை; பீ.கே. ரஸ்தா – வல்லவ ஆகிய ஐந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்பட்டன. புரவலர் ஹாஷிம் உமருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மாணவர்களுக்கு மடிக்கணனிகளை வழங்கி வைத்தனர்.

நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் நீட்டிய பௌண்டேசன்

இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, ஹாஷிம் உமர் பௌண்டேசனால் முன்னெடுக்கப்பட்டு வரும் நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலைச்செல்வன் ரவூப் மற்றும் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நவாஸ் சார்பில் அவரது மனைவி ஹபீலா நவாஸ் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களின் பங்களிப்பை மதிப்பதுடன், நலிந்த நிலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தத் திட்டம் சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.

‘அன்ஷேக்கன்’ நூல் வெளியீடு

இதனையடுத்து எழுத்தாளர் சஹேலா சபேல் எழுதிய ‘அன்ஷேக்கன்’ நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை ஹாஷிம் உமர் மற்றும் அவரது துணைவியார் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஹாஷிம் உமர் பௌண்டேசன் சார்பில் புத்தகத் தொகுதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இப்புத்தகங்களை சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கல்வி, ஊடகம், இலக்கியம் மற்றும் சமூக நலன் எனப் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் சமூகப் பணிகளின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :