இளைஞர்களின் கலைத்திறன்களை அடையாளம் கண்டு, அவற்றை மேலும் வளர்ப்பதையும், கலை மற்றும் படைப்பாற்றல் துறைகளில் அவர்களுக்கு நடைமுறை அனுபவங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி தொடர்ச்சியாக “இளையோர் சங்கமம்” நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், இளையோர் சங்கமத்தின் இரண்டாவது அமர்வு இம்முறை “நாடகமும் அரங்கியலும்” என்ற பிரதான கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி அரங்கில், நாடகக் கலை தொடர்பான அடிப்படை அறிவையும் நடைமுறைத் திறன்களையும் இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, மேடை நாடகப் பிரதி ஆக்கம், நடிப்பு, பாத்திர உருவாக்கம், மேடைப் பயன்பாடு மற்றும் அரங்கியலின் அடிப்படை அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
நாடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி, எழுத்து, நடிப்பு, மேடைப் பின்னணி மற்றும் அரங்கக் கலைகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் இப்பயிற்சி அரங்கில் கலந்துகொண்டு தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், அவர்களிடையே கலை, இலக்கியம் மற்றும் அரங்கியல் சார்ந்த ஆர்வத்தை வளர்த்து, எதிர்காலத்தில் திறமையான இளம் கலைஞர்களை உருவாக்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
இப்பயிற்சி அரங்கில் பங்கேற்று பயிற்சிகளைப் பெற விரும்பும் இளைஞர்கள், 075 488 0172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment