இவ்வாறு சிலரது மனோநிலைக்கு ஏற்ப எழுதுகின்ற கற்பனைகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் உண்மை என்று நம்புகின்றனர்.
இன்றைய நாகரீகமான உலகில் நாங்கள் வாழும்போதும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், அச்சு ஊடகங்கள் இருக்கின்ற காலத்திலேயே இவ்வாறான பொய்யான வரலாறுகளை பரப்ப முடியுமென்றால், பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை, எந்தவித சந்தேகமுமின்றி துல்லியமாக உண்மையான வரலாறாக நம்பலாமா என்ற அச்சம் ஏற்படுகின்றது.
மனித நாகரீகங்கள், கண்டுபிடிப்புக்கள் எதுவும் இல்லாத பண்டைய காலத்து கதைகளில் எத்தனையோ திரிபுகளும், குளறுபடிகளும், கற்பனைகளும் ஊடுருவி இருக்கலாம் என்பது தற்போதைய வரலாற்று திரிபுகள் மூலம் எண்ணத் தோன்றுகிறது.
வரலாறு என்பது வரலாறுதான். நடந்தது நடந்ததுதான். வரலாற்று சம்பவங்களை எழுதுகின்றவர்கள், அவர்களது இனத்துக்காகவும், மதத்துக்காகவும், பக்கச்சார்பாக எதனையும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. அவ்வாறு திரிபுபடுத்துவது பொய்யான வரலாறாகும் என்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் இயக்கத்தினரும் தமிழ் கிராமங்களுக்குள் புகுந்து ஏராளமான தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்ற செய்தியை ஆரம்பத்தில் ஓரிரு ஊடகங்கள் பரப்பியது. பின்பு அந்த ஊடகச் செய்திகளை ஆதாராமாகக் கொண்டு கொலைப் பட்டியலையும், திரிபுக் கதைகளையும் பலர் எழுதி வருகின்றனர்.
கடந்தகால தமிழ் – முஸ்லிம் மக்களின் கசப்புணர்வுகளை அறிந்துகொள்ளாத இன்றைய இளைய சமுதாயத்தினர், இவைகளை உண்மை என்று நம்புகின்றனர்.
விடயங்களை அறிந்தவன் என்றரீதியில் மட்டுமல்லாது, வரலாறுகளை அலசி ஆராய்ந்து உண்மைகளை இன்றைய இளைய சமுதாயதினர்களுக்கு எத்திவைப்பது எனது கடமையாகும்.
எனவே அடுத்துவரும் பதிவுகளில் இதுபற்றி ஆராய்வோம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

0 comments :
Post a Comment