அத்தனகலு ஓயாவினை அண்டிய தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறுவெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து, பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரண சேவைகளை வழங்குவதற்காக, அத்தனகல்ல பிரதேச அனர்த்த குழு இன்று (22) காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவசரமாகக் கூடியது.
இதன்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவர்களுக்கு இன்று இரவு முதல் சமைத்த உணவை வழங்குவது, தேவையான 4 இடங்களுக்கு (திஹாரிய, வேயாங்கொடை, பெம்முல்ல மற்றும் அத்தனகல்ல) 4 கடற்படைப் படகுகளை நிலைநிறுத்துவது மற்றும் பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் நீரைத் திறந்து விடுவது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு வேளை உணவிற்காக 200 ரூபாய் வீதம், ஒரு நாளைக்கு 600 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அத்தனகல்ல ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாபலகம, அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் தர்ஷன விஜேசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் புபுது கபுருகே மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment