கொழும்பில் இயங்கும் ஏ.எம் ரோயல் அகடமியினால் 6வது தடவையாக அழகு சாதான வடிவமைப்பு graduation ceremony





அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பில் இயங்கும் ஏ.எம் ரோயல் அகடமியினால் 6வது தடவையாக அழகு சாதான வடிவமைப்பு கலைத்துறை, மற்றும் அழகு சாதன திரவியங்கள் பொருட்களைத் தயாரிக்கும் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு அப்பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த 150 மாணவிகளுக்கு உயர்தர டிப்ளோமா பட்டச் சான்றிதழ்கள் , பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது . இப்பட்டமளிப்பு வைபவம். 23.05.2026 திகதி பி.எம்.ஜ.சி.எச் ல் (பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்) ஏ.எம். ரோயல் அகடமியின் முகாமைத்துவ பணிப்பாளரும் அழகுக்கலை நிபுணருமான கலாநிதி அஷ்மா முஸ்தாக் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் ஹாசிம் உமர் பவுண்டேசனின் செயலாளர் மரியம் ஹாசிம் உமர் கலந்து கொண்டனர் , கௌரவ அதிதியாக இலங்கை ருபாவாஹினியின் கூட்டுத்தாபணத்தின் தமி்ழ்ச் செய்திப்பிரிவு பிரதிப் பணிப்பாளர் சி.பி.எம். சியாம் ஆகியோறும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு டிப்ளோமா சன்றிதழ்களை வழங்கி வைத்தனர். அத்துடன் இத்துறை சார்ந்த அழகுகலைத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள். விரிவுரையாளர்கள். ஊடகவியலாளர்கள் பெற்றோர்கள் என பெருமளவில் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய ஏ.எம். ரோயல் அகடமியின் முகாமைத்துவ பணிப்பாளர் . அஸ்மா இப் பட்டமளிப்பு வைபவத்தில் உரை நிகழ்த்துகையில்

எமது பெண்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிராமல் அவர்களுக்கென ஓர் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருமானமொன்றை பெற்றுக் கொள்ள நிறைய பெண்கள் தற்பொழுது முன்வந்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு ஒர் முறையான அரச அங்கிகாரம் பெற்ற கல்வி நிலையம் இல்லாத குறையை என்னால் நிவர்த்தி செய்ய முடிந்தது. இத்துறையில் சிறந்த பயிற்சியைப் பெற்று அத்துறை சம்பந்தமான பட்டங்கள், மற்றும் அரச தொழிற்பயிற்சி நைட்டா நிறுவனத்தில் (என்.வி.கியு.) (லெவல் 4 )சான்றிதழ்களைப் பெற்று அவரவர்களது வீடுகளுக்கருகில் அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு அழகு சாதாண துறையில் நிறுவனங்களை நிறுவி தமது குடும்பத்தினை வாழ்க்கைச் செலவுக்கான ஒர் நிரந்தர வருமாணத்தினையும் இவர்கள் பெறுகின்றனர்.

ஆகவே தான் இத்துறை சம்பந்தமாக எனது முயற்சியில் கனடா. லண்டன் இந்தியா போன்ற நாடுகளில் பெற்ற பயிற்சியினை என்னைப் போன்ற ஏனைய சகோதரிகளுக்கும் இவ்வாறானதொரு அரச அங்கிகாரம் பெற்ற ஒர் கல்வி நிறுவனத்தினை கொழும்பில் நிறுவி எனது சேவையை இம் மகளிர்களுக்கும் வழங்கி வருதாகவும் அஷ்மா முஸ்தாக் அங்கு தனது பட்டமளிப்பு தலைமை உரையில் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :