புத்தளம் எம்.எச்.அப்துல் றசீத் எழுதிய 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' நூல் வெளியீட்டு விழா


கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கை ஜமாத்தே இஸ்லாமியின் மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் எம்.எச்.அப்துல் றசீத் எழுதிய 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' நூல் வெளியீட்டு விழா அண்மையில்( 15-01-2023) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை.கலாசார.சமூக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் கலந்து கொண்டார்.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் மருதமுனை கிளையின் சூறா சபை உறுப்பினரும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.சி.எம்.அஷ்ரபின் ஒழுங்கு படுத்தலில் நடைபெற்ற இந்த விழாவில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட் ஆகியோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.லத்தபிற்கு நூலாசிரியர்,எம்.எச்.அப்துல் றசீத் நூலின் முதற் பிரதியை வழங்கி கௌரவித்தார்.அஷ்செய்க் சாமில் மப்ராஸ் நழீமி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.மருதமுனை ஜாகிவீவஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.உபைதுர் றஹ்மான் அதிதிகளுக்கு நினைவுப்பரிசுப் பொதிகளை வழங்கி கௌரவித்தார்.

இங்கு சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பைரூஸ் தலைமை உரையாற்றுகையில்:-இஸ்லாமிய அழைப்புப் பணியிலே நீண்டகாலமாகப் பயனித்து வருபவர் புத்தளம் எம்.எச்.அப்துல் றசீத் ஆவார்.

இவர் எழுதிய 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்'நூல் தழிழ் பேசும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சமூக மாற்றம் என்பது சமூகத்தை நேர்வழியில் அறிவூட்டுகின்ற விடையமாகவுள்ளது.இன்று சமூகத்திலே நல்ல குடும்பங்களை உருவாக்க வேண்டிய அந்த விடையத்திற்கு வழிகாட்டியாக இந்த'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்'நூல் எழுதப்பட்டுள்ளது என்றார்.

இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் உரையாற்றுகையில்:-முஸ்லிம் திருமனங்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெறுகின்ற போது சமூக வாழ்வும் தொடங்ககின்றது.சமூக உறவு என்ற அடிப்படையில் இது முக்கியமாகிறது.இதை நோக்குகின்ற போது இரண்டு திருமண உறவுகள் உள்ளன ஒன்று திருமண உறவு மற்றது இரத்த உறவு முறைகள்.எமது சமூகம் வழிகாட்டல் அல்லாத சமூகமாக இப்பேர்து மாறிவிட்டது.மேலாதிக்கத்திற்குக் கீழ் மாறிவிட்டது.

வீட்டு வன்முறைகள்,திருமண வாழ்வில் விரிசல்கள் நிறைந்ததாக மாறிவிடுகின்றது.இதை தெளிவுபடுத்தம் வகையில் குர்ஆன்.சுன்னா ஊடாக 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' நூல் சிறப்பாகத் தெளிவு படுத்துகின்றது.

குழந்தை வளர்ப்புப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. புpள்ளளைகளின் பருவமாற்றம் ஏற்படும் போது நாங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.சமூக அமைப்பிலே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படாவிட்டால் அவை பிள்ளைகளின் வாழ்வியலைப் பாதிக்கின்ற விடையமாக மாறிவிடுகின்றது. திருமண வாழ்வை திட்டமிட்டால் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

கலாநிதி மஸ்றூபா முகம்மது மஜீட் ஆய்வுரை நிகழ்த்துகையில்:-இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் முக்கிய பல விடையங்களை எடுத்துக்காட்டுகின்றது.இஸ்லாமிய வரையறைக்குள் திருமணம் செய்வதும் அதன் அடிப்படையில் வாழ்வதும் முக்கியம் என்பதை இஸ்லாத்தின் பின்னணியில் திருமணம் பற்றி இந்தப் புத்தகத்தின் ஊடாக நூலாசிரியர் எடுத்துச் சொல்கிறார்.இந்த நூல் ஒரு பாடநூலுக்குச் சமமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாம் கல்வி நிலைக்குச் சமமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.இளம் தம்பதிக்கான கைநூல் இது வென்று சொல்லாம்.எந்த மதத்திலும் குறிப்பிடப்படாத விடையங்களை இந்த நூல் கொண்டிருக்கின்றது.உலகக் கல்வி தேவையில்லை என்று சொல்லுகின்ற சில குழுக்கள் இருக்கலாம் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் உலகக் கல்வியையும்,ஆண்மீகக் கல்வியையும் தேடிக்கற்க வேண்டிய தேவையும்,அவசியமும் இருக்கின்றது.

புனித அல்குர் ஆனில் இருந்து தான் பல ஆய்வுகள் செய்யப்படுகின்றது.இதன் மூலம் பல சிறப்பான முடிவுகள் வெளிவந்திருக்கின்றது.புரிதல் இல்லாமையாலும்;, விட்டுக் கொடுப்பு இல்hமையாலும் திருமணவாழ்வுகள் முறிவடைகின்றன. சமத்துவம்,சம நிலை என்பது பெண்களுக்கு இஸ்லாத்தில் இருக்கின்ற உரிமைகளும்,பௌதீக இயல்பு நிலையுமாகும்.பெற்றோர்களைப் பாதுகாத்து பராமரிக்கின்ற நிலை இப்போது இல்லாமல் போய்விட்டது இது பெரும் கவலைக்குரியதாகும்.

கணவனின் உறவுகளை அரவணைத்துச் செல்ல வேண்;டும்.ஆற்றல்களை உருவாக்குன்றவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டும்.ஒவ்வொரு பெண்ணும் வாசிப்பாளர்களாக மாற வேண்டும்.இஸ்லாம் ஒரு முறையான வாழ்க்கைத் திட்டம என்பதை இஸ்லாம் கூறுகின்றது இதற்கு அமைவாக நாம் வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேராசிரியர் கலாநிதி அஷ;nஷய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் ஆய்வுரை நிகழ்த்துகையில்:- சகோதரர் அப்துர் ரஷPத் எழுதியுள்ள சுமார் 130 பக்கங்களை உள்ளடக்கியுள்ள இந்நூலுக்கான தலைப்பை நூலாசிரியர் அல்-குர்ஆனின் வசனங்களிலிருந்தே பெற்றுள்ள மையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

நூலாசிரியர் நூலின் முதலாவது அட்டையிலேயே இந்நூல் 'கணவன் - மனைவி-பிள்ளைகள் மற்றும் இரத்த உறவுகளை சீரமைப்பதற்கான வழிகாட்டல்' எனவும், நூலட்டையின் கீழே 'இளம் தம்பதிகளுக்கான வழிகாட்டல் கைநூல்' எனவும் குறிப்பிட்டுள்ளமை நூலின் வழித் தடத்தை வாசகர்களுக்கு புரிய வைக்கின்றது.நூலின் உள்ளே அறிமுகம், வழிகாட்டல் கொள்கைகள், குறிக் கோள்களும் இலக்குகளும், உள்ளடக்கம் என்ற தலைப்புக்களில் சுமார் 17 பக்கங்கள் இந்நூலின் உள்நுழைவதற்கான வழிகாட்டல்களை வாசகர்களுக்கு இலகுவாக்கித்தர முயல்கின்றன.

இந்நூலின் தொடர்ச்சியாக சுமார் 100 பக்கங்களில் பத்து பாடத்தொகுதிகள் (ஆழனரடநள) அறிவுரைகள், திருமணத்தின் நோக்கம், குடும்ப வாழ்வு என்று பல்வேறு தலைப்புகளில் விடய தானங்கள் விரிவுபடுத்தப்பட்டு இரத்த பந்தங்கள், அழகும் அமைதியும் நிறைந்த சூழல் வீட்டுச் சூழல் என நூலின் இறுதிப்பகுதி இந்நூலின் முழுமையான எதிர்பார்ப்பை வாசகர்களுக்கு பூர்த்தி செய்து தருகின்றது.

நூலின் அனைத்து விடயங்களும்,பாடத்தொகுதிகளும்,அல்-குர்ஆன், அஸ்ஸூன்னா, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய சட்டக்கலை,தற்கால இஸ்லாமிய உலகின் நடை முறைகளை தனது கருத்துக்களுக்கு சான்றாகக் கொண்டு காணப் படுகின்றன.ஓவ்வொரு பாடத்தொகுதியின் இறுதியிலும் நூல் வாசகர்கள் தம்மை சுயமதிப்பீடு செய்யக் கூடிய வகையில் ஒவ்வொரு தலைப்புக்கும் தாம் வாழும் வாழ்க்கையின் நிகழ்காலப் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தாமே கணித்துக் கொள்ளக்கூடியதாக இந்நூல் வடிவமைக்கப் பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

திருமண உறவில் இணைந்து ஒரு இஸ்லாமிய வாழ்வுக்கும், புதிய குடும்ப உறவுக்கும் நுழையும் இளம் தம்பதியினர் தமது புதிய வாழ்வை தொடங்கு முன்பே இந்நூலை வாங்கி, அதன் வழிகாட்டலோடு, அல்-குர்ஆன், ஸூன்னாவின் பூரண வழிகாட்டலையும் மேற்கொள்வார்களாயின் அவர்களதும்,அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும் இவ்வுலக வாழ்வு இம்மை மறுமை இரண்டிலும் பூரண வெற்றியடையக்கூடியதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை.மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் மிகப் பெறுமதியான இந்நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :