சவுதி அரசின் மனிதாபிமான உதவி; ரமழான் முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு 50 தொன் பேரீச்சம் பழ நன்கொடை




அஷ்ரப் ஏ. சமத்-
டுத்த ஒரு இரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள புனித ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, சவுதி அரேபியா அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் எடையுள்ள பேரீச்சம் பழங்களை வழங்கும் நிகழ்வு 16.02.2026 அன்று கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் மஹ்மூத் அல் கஹ்தானி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழங்கிய பேரீச்சம் பழ நன்கொடையை, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு விவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, சவுதி நிவாரண மையத்தின் பிரதிநிதி, முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பல மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :