சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரின் சிறுவர் சந்தை!



முன்பள்ளி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'தனிநபர் மற்றும் சமூக விருத்தி'யை நோக்காக கொண்டு, சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரி முன்பள்ளியால் நடாத்தப்பட்ட சிறுவர் சந்தை இலங்கை இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இன்று (02) நடைபெற்றது.

தேர்தல் மறுசீரமைப்பு சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆணையாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வு, வியாபாரச் சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தைப் முன்பள்ளி மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடாத்தப்பட்டது.

பிர்லியன்ட் கல்லூரி நிருவாகம் மற்றும் பெற்றோர் இணைந்து மாணவர்களின் சமூக தொடர்பாடல் திறன் விருத்தியை வெளிக்கொணரும் நோக்கில் முன்பள்ளிக்கு வெளியே பொது இடமொன்றில் நடாத்தப்படுவது மாணவர்களுக்கு சிறந்த வெளிகாட்டலை (Exposure)ஐ கொடுக்கும் என்ற அடிப்படையில் இச்சந்தை பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள சாய்ந்தமருதின் முக்கிய பொதுச்சந்தை அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நடாத்தப்பட்டது.

சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.எஸ்.எம்.றிஷாட் இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

மரக்கறி மற்றும் பழ வகைகளை இனங்காணும் ஆற்றலைப் பெறல், தராசில் நிறுத்தல் மற்றும் அளத்தல் செய்யும் திறனைப் பெறல், ஒன்றிணைந்து ஒரு வேலையில் ஈடுபடும் பழக்கத்தைப் பெற்றுக்கொள்ளல், குழுச் செயற்பாட்டுத் தன்மையை விருத்தி செய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு இச்சந்தை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தருது பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோத்தர்களான திருமதி. வை.திருப்பதி, திருமதி. என்.எம்.எஸ்.ஷிறீன் மற்றும் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அஸ்தார், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நஸார், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர்.எம்.எச்.கே.சனூஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாக இதில் கலந்து சிறப்பித்தனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்.எம்.ஸாஜித், கல்முனை மெட்றோபொலிட்டன் கல்லூரி கணக்காளர் எஸ்.லியாகத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றிய இந்நிகழ்வில் பிர்லியன்ட் கல்லூரி முன்பள்ளியின் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் உறவினர்கள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

ஆரோக்கிய உணவகம், குளிர்பானம், நொறுக்குத் தீனிகள், பலூன் சூட்டிங், மலிகைப் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், சோளப் பொரி, முட்டை அவித்த கடலை, பலூன், மரக்கறி, சிற்றூண்டி, துணிக் வகைகள், போட்டோ ஸ்டுடியோ, புத்தகம், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள், அழகு சாதனப் பொருட்கள், பழ வவைகள், கேக் வகைகள், மசாலா பொருட்கள், தேங்காய், விளையாட்டுப் பொருட்களை உள்டக்கிய 65 மாணவர்களின் கடைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :