இந்நிகழ்வை முன்னிலைப்படுத்திய ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர், பைத்துஸ்சக்காத் நிதியத்தின் தலைவர் மற்றும் தொழிலதிபருமான அல்ஹாஜ் எம். எஸ். எம். முபாறக், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசிய உடைகள் அடங்கிய நிவாரண பொதிகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் டப்லியு. ஏ. கங்கா சாகரிக்கா தமயேந்தியிடம் கையளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக செல்லும் இந்த நிவாரணம், உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது என்றும், சமூக நலனுக்காக தொடர்ந்து இத்தகைய பங்களிப்புகள் முன்னெடுக்கப்படும் என்றும் அல்ஹாஜ் முபாறக் தெரிவித்தார்.
நிவாரண வழங்கல் நிகழ்வில் சாய்ந்தமருது–மாளிகைக்காடு ஜம்மிஇய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேய்க் எம். எம். சலீம் (சர்க்கி), ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதி தலைவர் வைத்தியர் ஏ. எச். எம். மிஸ்பாஹ், செயலாளர் எசார் மீராசாஹிப், பொருளாளர் ஏ. எம். சமீம், மேலும் பல குழு உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த முழு நிவாரண நடவடிக்கைக்கும் தேவையான அனுசரணை மற்றும் உதவிகளை சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment