மருதமுனையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் சேகரிப்பு; கண்டி, புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மருதமுனை கிளை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மண் சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு பணி மருதமுனையில் அனைத்து பள்ளிவாசல்கள் ரீதியாகவும் கடந்த மூன்று தினங்களாக சேகரிக்கப்பட்டதோடு சிவில் சமூக அமைப்புக்கள், இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றிய மனிதாபிமான நிவாரண சேகரிப்பு பொருட்களும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுகள் மற்றும் பண ரீதியாகவும் சேகரிக்கப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் நேற்று (04) மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இந்த நிவாரணப் பொருட்கள் மூன்று கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைய பாதிக்கப்பட்ட கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு நேற்று (05) எடுத்துச் செல்லப்பட்டன.

இதே நேரம் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் சார்பாக அதன் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கையளிப்பதற்காக சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்த மனிதாபிமான செயற்பாட்டில் மருதமுனை மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றியமை பாராட்டத்தக்கது என பொதுமக்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்துள்னனர். சிறுவர்கள், முதியோர்கள், இளைஞர்கள், ஆண்கள் - பெண்கள் என பலரும் தம்மால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி குறித்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு மருதமுனை உலமாக்கள் பலரும் தமது பாராட்டையும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :