ஜனாதிபதியின் தலைமையில் கண்டியில் நடந்த மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம்



னாதிபதி அனுரகுமார திசாநாயக சனிக்கிழமை (6)முற்பகல் கண்டி செயலகத்தில் மாவட்ட இணைப்புக் குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற காரணத்தால் கண்டி மாவட்டத்தில் அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்றவற்றை ஆராய்வதே இந்த இணைப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
இதில் ,மத்திய மாகாண ஆளுநர், அங்குள்ள அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்ததோடு,ஜனாதிபதியின்பணிப்புரைகளுக்கும்,அறிவுறுத்தல்களுக்கும் செவி மடுத்தனர்.
அதன்போது,பிந்திய கணிப்பின் படி 1800க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டபோதிலும்,அவற்றில் 750க்கு மேற்பட்ட வீடுகளும்,ஏனைய கட்டிடங்களும் முற்றாகவே சேதமடைந்து விட்டதாக கூறப்படுவதை அங்கு சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பீ அவற்றை மீண்டும் செப்பனிட அல்லது முழுமையாக நிர்மாணிப்பதற்கு முன்பதாக எந்த
ஆபத்தும் இல்லை என தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் (NBRO)உரிய முறையில் ஆராய்ந்து, உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
அந்த அமைப்பில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் அதனை திறன்பட மேற்கொள்வதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் (Geology)பீடத்தின் நிபுணர்களையும் சம்பந்தப்படுத்தி அந்தப் பணியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் அவர்கேட்டுக் கொண்டார்.
அத்துடன் சேதமடைந்துள்ள பிரதான பாதைகளை தாமதமின்றி செப்பனிடுமாறு அவர் கூறினார்.கொழும்பு பாதையில்
கடுகண்ணாவையில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருப்பதால் அதிகமானோர் பயணிக்கும் குருநாகலையிலிருந்து கடுகஸ்தோட்டை நோக்கிச் செல்லும் பாதை கலகெதரைக்கு அப்பால் சில இடங்களில் குறுகி மிகவும் மோசம் அடைந்திருப்பதை சுட்டி காட்டியதோடு, அந்தப் பாதை சீர்கெட்டு இடிந்தது விடக்கூடிய அபாயத்தையும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதால் அவர்களை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கான மாற்று ஏற்பாடு பண்ணிய பின்னரே பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் கூறி இருக்கிறார் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட தொகுதியில் தெல்தோட்டை மலைமகள் மத்திய கல்லூரி மற்றும் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் நாரங்ஹேன,பட்டியகம தோட்ட(estate) இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதால், அவற்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களுக்கான மாற்றிடத்தை உறுதிப்படுத்துமாறும் ஹக்கீம் கேட்டுள்ளார்.அதற்கான ஏற்பாட்டை செய்வதாக தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண ஒப்புக் கொண்டுள்ளார்
.
பாரிய மண் சரிவு ஏற்பட்ட பகுதியிலுள்ள ரம்புக்எல பாடசாலையை சீரமைக்க முடியும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்ட பொழுது ,அது பற்றி கூறிய ஹக்கீம் எம்.பி,அந்த பாடசாலைக்கு அருகாமையிலும் பக்கத்திலிருந்தும் மண் சரிந்துள்ளதாலும், அக்குறணை பிரதேச சபை முன்னாள் மறைந்த மு.கா. உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்திருப்பதால் மாணவர்கள் அபாயங்களை எதிர் நோக்குவதாலும் பாடசாலையை அந்த இடத்திலேயே நடத்துவதற்கு அச்சம் தெரிவித்திருக்கிறார்.
ரம்புக்கெல,கம்பளை,தெல்தோட்டை பிரதேச பாதை சீர்கேடுகள் போன்ற அனர்த்த பாதிப்புகள் உட்பட இன்னும் பல விடயங்களும் பேசப்பட்டன.
அத்துடன், அங்கிருந்து வெளியேறும் போது ,உலக அரச தலைவர்களுடன் கதைத்து சர்வதேச நன்கொடை வழங்கும் நாடுகளின் மாநாடு ஒன்றை கொழும்பை மையப்படுத்தி நடத்துவதன் அவசியத்தை தான் முந்திய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதை ஜனாதிபதிக்கு நினைவூட்டிய போது, அது பற்றி ஏற்கனவே இந்திய பிரதமர் மோடியுடன் கதைத்ததாகவும் ஏனையோருடனும் கதைக்கலாம் என்றும் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :