சம்மாந்துறையில் கடும் காற்றால் கடும் சேதம்!



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால், பல மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிரின் பணிப்புரையின்படி வீதிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள், விரைவாக முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட்டின் நேரடி கண்காணிப்பில், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, வீதிகளில் விழுந்த மரங்கள் இரவோடிரவாக வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :