30 வருட காணி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை – முஸ்னத் முபாறக்



கிழக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அரவிந்த செனரத் விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்ப‌தை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ர‌வேற்றுள்ள‌து.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் 30 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக காணி உறுதிப் பத்திரமோ அல்லது காணி அனுமதிப்பத்திரமோ வழங்கப்படவில்லை.

இத்த‌னைக்கும் காத்தான்குடியை சேர்ந்த‌ ஹிஸ்புள்ளா 1989 முத‌ல் எம்பியாக‌, அமைச்ச‌ராக‌, கிழ‌க்கு ஆளுனராக‌ ப‌ல‌ அதிகார‌ ப‌த‌வி வ‌கித்தும் இப்பிர‌ச்சின‌ தீர‌வில்லை என்றால் அத‌ற்கு அவ‌ரிம் அவ‌ர் ப‌த‌வி வ‌கித்த‌ க‌ட்சிக‌ளும் கார‌ண‌மாகும்.
அவ‌ர் ப‌த‌வி வ‌கித்த‌ க‌ட்சிக‌ள் அனைத்தும் அமைச்ச‌ர‌வை அதிகார‌த்தில் இருந்துள்ள‌ன‌.

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய‌ காங்கிர‌ஸ் எம்பிக்கள் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் இப்படியான காணிப்பிர‌ச்சினைக‌ள் 30 வருடமாக தீர்க்க‌ப்ப‌டாம‌ல் உள்ளது. கல்முனை நிலையும் இதுதான். காத்தான்குடி, கல்குடா, மன்னார் நிலைமையும் இதுதான். அப்படியாயின் இந்த முஸ்லிம் எம்பிக்கள் அதிகாரத்தில் இருந்து எதை செய்தனர். இப்பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ ச‌க்தியிருந்தும் தீர்க்காம‌ல் வேண்டுமென்றே பிச்சைக்கார‌ன் புண் போல் வைத்து ச‌மூக‌த்தை ஏமாற்றியுள்ள‌ன‌ர் என்ப‌து தெரிகிற‌து.

இப்போது ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ ஆட்சி வ‌ந்த‌ பின் தான் தூக்க‌த்திலிருந்து எழுந்த‌வ‌ன் போன்று ச‌மூக‌ பிர‌ச்சினை இவ‌ர்க‌ளுக்கு தெரிகிற‌து.

க‌ட‌ந்த‌ கால‌த்தில் முஸ்லிம் எம்பீக்க‌ளால் தீர்க்க‌ப்ப‌டாத‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் இந்த‌ அர‌சில் தீர்க்க‌ப்ப‌டும் என‌ ந‌ம்புகிறோம்.

முஸ்ன‌த் முபாற‌க்
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :