இன்றைய மீலாத் தினம் குறித்து ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் வாழ்த்து செய்தி:



ன்றைய மீலாத் தினம் எனப்படும்  முஸ்லிம்களின் கலாசார நிகழ்வை, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப நினைவு கூருகிற முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது பிறந்த தினமான 12 ரபீஉல் அவ்வல் திகதியை தனிப்பட்ட முறையில் நினைவு கூர்ந்ததாக வரலாற்றில் இல்லை. ஆனால், அவர்கள் தங்களது பிறந்த நாளான திங்கட்கிழமை அன்று நோன்பு நோற்று அதனை மதித்ததாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஹதீஸில், "திங்கட்கிழமை என் பிறந்த நாள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதையும் பார்க்கலாம். எனவே, நபியை நேசிக்கும் ஒவ்வொருவரும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்றுப் பிறந்த நாளை நினைவு கூறுவது நபி வழியாக (ஸுன்னா) கருதப்படுகிறது.

ஆனால், 12 ரபீஉல் அவ்வல் தினத்தை ஒருவகை மகிழ்ச்சித் திருநாளாக கொண்டாடுவது பிற்கால முஸ்லிம் சமூகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கலாசார நிகழ்வாகும்.

இத்தகைய கலாசார நிகழ்வுகள் பல முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாலும், இலங்கை முஸ்லிம்களும் பெரும்பாலும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, மீலாத் தினம் என்ற பெயரில் இந்த நாளை ஏழைகள் மற்றும் தேவையுடையோருக்கு உதவி செய்வதன் மூலம் நினைவுகூர்வதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

முஸ்னத் முபாரக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :