வரக்காபொலை வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளனமும், வரக்காப்பொலை மஸ்ஜித் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மீலாதுன் நபி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி வளவில் நடைபெற உள்ளது.
இவ்விழா, வரக்காபொலை வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் எம். எம். எம். ஆமிர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
விழாவின் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் பங்கேற்கிறார்.
அதேவேளை, விசேட அதிதிகளாக கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ, வரக்காப்பொலை பிரதேச சபை தலைவர் சந்தன எதிரிசிங்க, வரக்காப்பொலை பிரதேச செயலாளர் ரங்கன சஜீவ, பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி அதிபர் ஜே. எம். ராபில்,
வரக்காப்பொலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. பி. சி. பிரஸாத்,
பிரதேச சபை உறுப்பினர்கள் றிஸ்மின் ஆமிர் மற்றும் எம். பி. எம். ஷரீப் ஆகியோரும் கலந்து கொள்வர் என வரக்காபொலை வலய அஹதியா சம்மேளன செயலாளர் முனீப் நியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment