இந்த செயலமர்வை முகாமைத்துவம் மற்றும் வணிகக் கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் (கலாநிதி) ஏ. எம். எம். முஸ்தபா மற்றும் முகாமைத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர் (கலாநிதி) எம். ஏ. சி. சல்பியா உம்மா தலைமையேற்றனர். அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி பாதைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
செயலமர்வின் முக்கியத்துவத்தை உயர்த்தும் வகையில் இந்தியப் பல்கலைக்கழகங்களிலிருந்து சிறப்பு வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேற்பார்வையாளர் கலாநிதி எம். அப்துல் ஜமால் தனது விரிவான கல்வி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மாணவர்கள் உலகளாவிய தரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி எச். யாஸ்மின் சுல்தானா தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில் முனைவு திறன்கள் தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
முன்னாள் பேராசிரியர் கலாநிதி சங்கர் சட்டர்ஜீ பொருளாதார மேம்பாடு, சமூக மாற்றம் மற்றும் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றின் தொடர்பை வலியுறுத்தினார்.
இந்த செயலமர்வில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் பொருளியல் அடிப்படையிலான சிந்தனை, தொழில்முறை திறன் மேம்பாடு, மற்றும் அனுபவமிக்க வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டனர். அவர்கள் எதிர்காலக் கல்வித் திட்டங்களை முன்னெடுக்க தேவையான ஊக்கமும் நம்பிக்கையும் இந்த நிகழ்வின் மூலம் பெற்றதாக தெரிவித்தனர்.
இந்திய வளவாளர்கள் பங்கேற்ற இந்த அபிவிருத்தி செயலமர்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பயணத்திற்கான புதிய திசையையும் உருவாக்கி வைத்துள்ளது. பல்கலைக்கழகம் தொடர்ந்து இத்தகைய அறிவியல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment