டித்வா புயல் அனர்த்தம் தொடர்பான செய்திகளை திரட்டும் பணிகளில் ஈடுபட்டபோது பல்வேறு சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்ட சில ஊடகவியலாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கட்சி தீர்மானித்திருந்தது. அதன் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், அனர்த்த காலத்தில் சமூக பொறுப்புணர்வுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில், புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த முயற்சி ஊடகவியலாளர்களின் சேவையை மதிப்பதுடன், எதிர்காலத்திலும் சமூக நலனுக்காக அவர்கள் ஆற்றும் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாக அமைந்தது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக், செயலாளர் எம்.எம். இர்பான், கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், நிதியுதவி பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும், இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த நிர்வாக சபை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க கட்சி முன்வருவதாக கட்சியின் தலைமை தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இத்தகைய மனிதநேய நடவடிக்கைகள் தொடரும் என உறுதியளிக்கப்பட்டது.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 comments :
Post a Comment