வெல்லாவெளியில் சமுக நலன்புரி ஒன்றியம் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு !



வி.ரி.சகாதேவராஜா-
மூக நலன்புரி நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 215 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிவாரணப் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த பணியின்போது போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சன் முன்னி லையில் நிவாரணப் பொருட்களை நிறுவன இணைப்பாளர் சிவசுந்தரி பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் பயனாளிகளுக்கு கையளித்தனர்.
போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனும் நிவாரணப் பொருட்களை கையளித்தார் .
நிகழ்வில் பல்வேறு அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர் .

இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அரச அதிகாரிகளுக்கும், எமது நிறுவன உத்தியோகத்தர்களுக்கும், திலகவதியார் மகளிர் இல்ல பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறுவன ஸ்தாபக தலைவர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :